உலக செய்திகள்

அமெரிக்காவில் 7 வாகனங்கள் மீது பால் வண்டி மோதல்: 4 பேர் பலி; பலர் காயம் + "||" + Milk cart collision with 7 vehicles in US: 4 killed; Many others were injured

அமெரிக்காவில் 7 வாகனங்கள் மீது பால் வண்டி மோதல்: 4 பேர் பலி; பலர் காயம்

அமெரிக்காவில் 7 வாகனங்கள் மீது பால் வண்டி மோதல்:  4 பேர் பலி; பலர் காயம்
அமெரிக்காவில் 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.


அரிசோனா,

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் நகரில் சாலையில் பால் ஏற்றி கொண்டு சென்ற லாரி ஒன்று போக்குவரத்து நெரிசலில் நிற்காமல், கட்டுப்பாட்டை இழந்து மற்ற பயணிகள் வாகனங்களுடன் மோதி விபத்திற்குள்ளானது.

இதுபோன்று அந்த வாகனம் 8 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியுள்ளது.  இந்த சம்பவத்தில், அந்த லாரி தீப்பிடித்து முற்றிலும் எரிந்து போனது.  இதில் பலர் படுகாயமடைந்தனர்.  உடனடியாக மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

எனினும், படுகாயமடைந்தவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.  பலர் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  அவர்களில் பலரது நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்

1. மோதலில் ஈடுபட்ட மந்திரியை ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும்: கோவா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
தமிழக நிதி அமைச்சருடன் மோதலில் ஈடுபட்ட மந்திரியை, ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோவா எம்.எல்.ஏ.வான சுதின் தாவலிக்கர் வலியுறுத்தி உள்ளார்.
2. சீனாவில் காரை கொண்டு மனைவி மீது மோதல்; 7 பேருக்கு கத்திக்குத்து: கணவன் வெறிச்செயல்
சீனாவில் பழிவாங்கும் நோக்கில் காரை கொண்டு மனைவி மீது மோதிய கணவரை தடுக்க சென்ற 7 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
3. திருத்தணி அருகே விபத்து: மின்கம்பம் மீது சரக்கு ஆட்டோ மோதல்; கணவன், மனைவி படுகாயம்
திருத்தணி அருகே காய்கறிகள் ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன், மனைவி படுகாயம் அடைந்தனர். இதனால் மூன்று மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
4. கேரம் விளையாட்டில் மோதல் வாலிபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது
கேரம் விளையாட்டில் மோதல் வாலிபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது.
5. ஐ.எஸ். அமைப்புடன் மோதல்: போகோ ஹரம் அமைப்பின் தலைவர் மரணம்
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடனான மோதலில் போகோ ஹரம் அமைப்பின் தலைவர் அபுபக்கர் ஷேகாவ் மரணம் அடைந்துள்ளார்.