மெகுல் சோக்சிக்கு ஜாமின் வழங்க டொமினிக்கா ஐகோர்ட்டு மறுப்பு


மெகுல் சோக்சிக்கு ஜாமின் வழங்க டொமினிக்கா ஐகோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 12 Jun 2021 7:30 AM GMT (Updated: 12 Jun 2021 7:30 AM GMT)

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தேடப்பட்டு வந்த மெகுல் சோக்சிக்கு ஜாமின் வழங்க டொமினிக்கா ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

டொமினிக்கா,

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த வைர வியாபாரி மெகுல் சோக்சி, ஆன்டிகுவா தீவில் தஞ்சம் அடைந்திருந்தார். அங்கிருந்து கடந்த மாதம் 23-ந் தேதி டொமினிக்காவுக்கு சென்றபோது, சட்டவிரோதமாக நுழைந்ததாக கைது செய்யப்பட்டார்.

ஆனால், டொமினிக்காவுக்கு கடத்திச் சென்றதாகவும் மெகுல் சோக்சி கூறி வருகிறார். இதனை தொடர்ந்து மெகுல் சோக்சிக்கு ஜாமின் வழங்குமாறும் டொமினிகாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை மாவட்ட நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து, டொமினிக்கா ஐகோர்ட்டில் ஜாமின் கோரி மெகுல் சோக்சி தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மெகுல் சோக்சிக்கு ஜாமின் வழங்க டொமினிக்கா ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. மெகுல் சோக்சி வேறு நாட்டுக்கு தப்பிச் சென்றுவிடும் அபாயம் இருப்பதால் அவருக்கு ஜாமின் வழங்க முடியாது என டொமினிக்கா நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Next Story