அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது


அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 15 Jun 2021 8:31 PM GMT (Updated: 2021-06-16T02:01:56+05:30)

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது.

வாஷிங்டன்,

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்  உலக முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொற்று பரவி ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் ஆகியுள்ள பாதிலும் கொரோனாவின் கோர தாண்டவம் கட்டுக்குள் வந்தபாடில்லை. உருமாற்றம் அடைந்து அடுத்தடுத்து அலைகளாக வந்து வைரஸ் இன்னமும் பல நாடுகளில் வீரியத்துடன் பரவி வருகிறது. 

மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் போடும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால், நம்பிக்கை அளிக்கும் வகையில் தொற்று பரவல் சற்று தணிந்து வருகிறது. குறிப்பாக உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் தற்போது தொற்று பரவல் கணிசமாக கட்டுக்குள் வந்துள்ளது. 

இதற்கிடையில், கொரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது. அமெரிக்காவில் அதிகபட்சமாக கலிபோர்னியா மாகாணத்தில் மட்டும் 63 ஆயிரம் பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். 

அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,43,44,659- ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 5,288- தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கொரோனா பாதிப்பு பற்றிய விவரத்தின் அடிப்படையில் இந்த எண்ணிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது. 

Next Story