உலக செய்திகள்

பராகுவேயில் 4 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு + "||" + paraguay Coronavirus Cases 401,243

பராகுவேயில் 4 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

பராகுவேயில் 4 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு
தென் அமெரிக்க நாடான பராகுவேயில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.
நியூயார்க்,

தென் அமெரிக்க நாடான பராகுவேயில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,482 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,01,243-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கொரோனாவுக்கு மேலும் 113 போ பலியானதைத் தொடா்ந்து, உயிரிழந்தவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 11,294-ஆக உயா்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பராகுவேயில் 54,092 கொரோனா நோயாளிகள் உள்ளனர். அவா்களில் 597 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.