உலக செய்திகள்

அமெரிக்காவில் 150 நாட்களில் 30 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள்: அதிபர் பைடன் அறிவிப்பு + "||" + 30 million corona vaccine doses in 150 days in the United States: Announcement by President Biden

அமெரிக்காவில் 150 நாட்களில் 30 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள்: அதிபர் பைடன் அறிவிப்பு

அமெரிக்காவில் 150 நாட்களில் 30 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள்:  அதிபர் பைடன் அறிவிப்பு
அமெரிக்காவில் 150 நாட்களில் 30 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என அதிபர் பைடன் அறிவித்துள்ளார்.வாஷிங்டன்,

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்று கொண்ட பின்னர், கொரோனா தடுப்பூசி பணிகளில் தீவிர கவனம் செலுத்தினார்.  வருகிற ஜூலை 4ந்தேதிக்குள் அமெரிக்காவில் வயது வந்தோரில் 70 சதவீதத்தினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது பெற்று விட வேண்டும் என இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகள் நடந்தன.

இந்த நிலையில் பைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவில் 150 நாட்களில் 30 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.  ஆனால், நான் ஆட்சி பொறுப்பேற்றபோது நமது நாடு நெருக்கடியான காலகட்டத்தில் இருந்தது.

150 நாட்களுக்கு முன் அமெரிக்காவில் நிலைமை எப்படி இருந்தது என நினைவுப்படுத்தி கொள்ளுங்கள்.  அமெரிக்கர்கள் அனைவருக்கும் போதிய தடுப்பூசி வினியோகம் என்பது நம்மிடம் இல்லை.

ஆனால், நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு அதனை மாற்றியுள்ளோம் என அதிபர் பைடன் கூறியுள்ளார். 

கொரோனா வைரஸ் ‘டெல்டா பிளஸ்'  ஆக தொடர்ந்து உருமாறி வருகிறது என்றும் அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தரவுகளின்படி, நேற்று வரை வயது வந்தோரில் 65 சதவீதத்தினர் குறைந்தது ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
சி.பி.எஸ்.இ. போல் தமிழக பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
2. கெஜ்ரிவாலின் இலவச மின்சார அறிவிப்பு மக்களை முட்டாளாக்கும் நாடகம்: பஞ்சாப் மந்திரி
டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலின் 300 யூனிட் இலவச மின்சார அறிவிப்பு மக்களை முட்டாளாக்கும் நாடகம் என பஞ்சாப் மந்திரி கூறியுள்ளார்.
3. ராஜஸ்தானில் 2 ஆயிரம் கலைஞர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம்: கொரோனாகால நிதி அறிவிப்பு
ராஜஸ்தானில் 2 ஆயிரம் கலைஞர்களுக்கு முதல் மந்திரி தலா ரூ.5 ஆயிரம் கொரோனா நிதியுதவி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
4. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 123 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 123 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5. கள்ளக்குறிச்சியில் 10 தெருக்கள் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
கள்ளக்குறிச்சியில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 10 தெருக்கள் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு