உலக செய்திகள்

மியான்மருக்கான ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும்; ஐ‌.நா. பொது கூட்டத்தில் தீர்மானம் + "||" + United Nations calls for halt of weapons to Myanmar

மியான்மருக்கான ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும்; ஐ‌.நா. பொது கூட்டத்தில் தீர்மானம்

மியான்மருக்கான ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும்; ஐ‌.நா. பொது கூட்டத்தில் தீர்மானம்
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
மேலும் மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரையும் ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது. இதனிடையே ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மியான்மர் மக்கள் பல மாதங்களாக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை 900-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் மியான்மரின் ராணுவ ஆட்சிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தில் மியான்மருக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆங் சான் சூகி உள்பட ராணுவத்தால் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், ராணுவ ஆட்சிக்கு எதிராக அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களை ஒடுக்க வன்முறையை பயன்படுத்துவதை நிறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மியான்மர் ராணுவ ஆட்சியை எதிர்த்து, கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 119 நாடுகள் வாக்களித்தன. பெலாரஸ் நாடு மட்டும் இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது. அதேசமயம் மியான்மருக்கு ஆயுதங்களை வழங்கி வரும் சீனா மற்றும் ரஷியா இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தன.

தொடர்புடைய செய்திகள்

1. மியான்மரில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவு
மியான்மர் நாட்டில் இன்று நள்ளிரவு ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவானது.
2. மியான்மரில் ராணுவ ஆட்சிக்குப் பிறகு பொருளாதாரம் கடும் வீழ்ச்சி
ராணுவ ஆட்சி அமலுக்கு வந்து 8 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
3. மியான்மரில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 5.0 ஆக பதிவு
மியான்மர் நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.0 ஆக பதிவானது.
4. மியான்மர்: ஆங்சான் சூகிக்கு ஊழல் வழக்குகளில் 60 ஆண்டு சிறை கிடைக்க வாய்ப்பு
மியான்மரில் மனித உரிமை போராளி என்று அறியப்படும் பெண் தலைவர் ஆங்சான் சூகி மீதான ஊழல் வழக்குகள் மீது அக்டோபர் 1ம் தேதி மியான்மர் ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை தொடங்குகிறது.
5. மியான்மரில் ராணுவம் - கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல்: 20 பேர் பலி
மியான்மரில் ராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 20 பேர் உயிரிழந்தனர்.