உலக செய்திகள்

குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்க வில்லை, அடிமை போல் நடத்துகிறார் - தந்தை மீது பிரபல பாப் பாடகி பரபரப்பு புகார் + "||" + Britney Spears tells court her father wont let her reproduce or marry and treats her like a slave as she begs judge to free her from conservatorship

குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்க வில்லை, அடிமை போல் நடத்துகிறார் - தந்தை மீது பிரபல பாப் பாடகி பரபரப்பு புகார்

குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்க வில்லை, அடிமை போல் நடத்துகிறார் - தந்தை மீது பிரபல பாப் பாடகி பரபரப்பு புகார்
பிரபல பாப் நட்சத்திரம் பிரிட்டனி ஸ்பியர்ஸ் தனது தந்தை தன்னை திருமணம் செய்து கொள்ளவோ, குழந்தை பெற்றுக்கொள்ளவோ அனுமதிக்க வில்லை என்றும் தன்னை ஒரு 'அடிமை' போல நடத்துவதாக நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.
லாஸ்ஏஞ்சல்ஸ்

உலகின் மிகப்பெரிய பாப் நட்சத்திரங்களுள் ஒருவர் பிரிட்டனி ஸ்பியர்ஸ். அவரது  அவரது தந்தை ஜேமி க்கும் இடையில் நீண்ட வருடங்களாக சட்டபோராட்டம் நடைபெற்று வருகிறது.

68 வயதான ஜேமி ஸ்பியர்ஸ், பிரிட்டனி ஸ்பியர்ஸின் கிட்டத்தட்ட 60 மில்லியன் சொத்துக்களை  மேற்பார்வையிட்டு வருகிறார்.அவர்  ஒரு தொழில்முறை   மேலாண்மை நிறுவனத்துடன் சேர்ந்து உரிமம் பெற்ற தொழில்முறை பாதுகாவலர் என  ஸ்பியர்ஸின் தனிப்பட்ட பாதுகாப்பை தற்காலிக அடிப்படையில்  எடுத்துக் கொண்டுள்ளார். 

பொதுவாக தங்களை கவனித்துக் கொள்ள முடியாதவர்களுக்கு கன்சர்வேட்டர்ஷிப் என்ற அடிப்படையில்  சம்பந்தப்பட்டவர்கள்  சொத்துக்களையும்  அவர்களையும் பாதுகாத்து வருவது ஆகும்.

பாடகர் பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது தந்தையிடம் இருந்து பாதுகாப்புக்கான கன்சர்வேட்டர்ஷிப்பை  முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரிட்டனி ஸ்பியர்ஸ் தனது தந்தை அவளை குழந்தை பெற்றுக்கொள்ளவோ,  திருமணம் செய்து கொள்ளவோ அனுமதிக்க வில்லை என்றும் அவளை ஒரு 'அடிமை' போல நடத்துகிறார் என்றும் நீதிமன்றத்தில் கூறி உள்ளார். மேலும் தன்னை தந்தையின் பாதுகாப்பில்  இருந்து  விடுவிக்க வேண்டும் என கூறி இருந்தார்.

உணர்ச்சிவசப்பட்ட  நிலையில்  பிரிட்டனி ஸ்பியர்ஸ் பேசிய 23 நிமிட தொலைபேசி உரையாடல் நேற்று  நீதிமன்ற அறையில் ஒளிபரப்பப்பட்டது.

பிரிட்டனி ஸ்பியர்ஸ்  லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிபதியிடம், அவர் போதை மருந்து உட்கொண்டதாகவும், தனது விருப்பத்திற்கு எதிராக செயல்பட நிர்பந்திக்கப்பட்டதாகவும், கடந்த 13 ஆண்டுகளில் தான் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்க கருத்தடை சாதனம் கட்டாயமாக பொருத்தப்பட்டதாகவும் கூறி உள்ளார்

மேலும் என்னால் வேலை செய்ய முடிந்தால் நான் கன்சர்வேட்டராக இருக்கக்கூடாது. சட்டங்கள் மாற வேண்டும். இந்த பழமைவாதம் தவறானது என்று நான் நம்புகிறேன். 

நான் என் காதலனுடன் திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தையைப் பெற விரும்புகிறேன், ஆனால் என்னால் அதைச் செய்ய முடியவில்லை இந்த  கன்சர்வேட்டர்ஷிப் என்னை தடுக்கிறது என அதில் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 20 நாட்களாக மழைநீர் குழாயில் சிக்கி தவித்த பெண் நிர்வாண நிலையில் மீட்பு
அமெரிக்காவின் புளோரிடாவில் 20 நாட்களாக மழைநீர் குழாயில் தவித்த பெண் நிர்வாண நிலையில் மீட்பு
2. சிறிய காதுகள், வெட்டப்பட்ட உதடுகள்,மூக்கு, என வேற்றுகிரகவாசியாக உருமாறி வரும் வாலிபர்
தனது மூக்கு, காது, உதடு மற்றும் நாக்குகளை அறுத்துக்கொண்டு தன்னை வேற்று கிரக வாசியாக உருமாற்றிக்கொண்டுள்ள இளைஞர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.
3. ஒரே காரில் 25 பேர் பயணம் டிரக் மோதி விபத்தில் 13 பேர் பலி
கலிபோர்னியா மாகாணத்தில், ஒரே காரில் 25 பேர் பயணம் செய்தபோது, காரின் மீது டிரக் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
4. சீனாவில் பிறப்பு விகிதம் 30% குறைந்தது அதிர்ச்சியூட்டும் தகவல்
சீனாவில் முந்தைய ஆண்டு பிறப்பு விகிதத்தை விட 2020-ஆம் ஆண்டின் பிறப்பு விகிதம் 30 சதவீதம் குறைந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
5. அமெரிக்க போர் கப்பலுக்கு அருகே சென்ற ரஷிய போர் விமானம்!
கருங்கடலில் அமெரிக்க போர் கப்பலுக்கு அருகே பறந்து சென்ற ரஷிய போர் விமானம்!