உலக செய்திகள்

ஒசாமா பின்லேடன் தியாகி என இம்ரான் கான் வாய் தவறி கூறி விட்டார் - பாக். மந்திரி விளக்கம் + "||" + Slip Of Tongue": Pak Minister On Imran Khan's Remark On Osama Bin Laden

ஒசாமா பின்லேடன் தியாகி என இம்ரான் கான் வாய் தவறி கூறி விட்டார் - பாக். மந்திரி விளக்கம்

ஒசாமா பின்லேடன் தியாகி என இம்ரான் கான் வாய் தவறி கூறி விட்டார் - பாக். மந்திரி விளக்கம்
கடந்த ஆண்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய இம்ரான் கான், ஒசாமா பின்லேடனை தியாகி எனக் கூறினார்.
இஸ்லமாபாத்,

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில்  கடந்த ஆண்டு உரையாற்றிய அந்நாட்டு  பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானின் அபோட்டாபாத்திற்கு வந்த அமெரிக்கர்கள், தியாகி ஒசாமா பின்லேடனைக் கொன்றனர்” என்று  பேசியிருந்தார். இம்ரான்கானின் இந்த பேச்சு சர்வதேச அரங்கில் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது. 

இம்ரான்கான் மேற்கண்டவாறு பேசி ஏறத்தாழ ஒரு ஆண்டு ஆன நிலையில்,  இது குறித்து பாகிஸ்தானின் தகவல் துறை மந்திரி ஃபவாத் சவுத்ரி பேசியுள்ளார். ஃபவாத் சவுத்ரி கூறுகையில், “ இம்ரான் கான் வாய் தவறியே அவ்வாறு பேசிவிட்டார். ஒசாமா பின்லேடனை பயங்கரவாதியாகவே பாகிஸ்தான் கருதுகிறது. அல்கொய்தா இயக்கத்தையும் பயங்கரவாத இயக்கமாகவே நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

கடந்த 2011 ஆம் ஆண்டு, மே மாதம் 2 ஆம் தேதி, பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் நுழைந்த அமெரிக்கப் படையினர், அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை சுட்டு வீழ்த்தினர். ஒசாமா, அங்குப் பதுங்கியிருந்தது பற்றித் தங்களுக்குத் தெரியாது என்று பாகிஸ்தான் திட்டவட்டமாகத் தெரிவித்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவுக்கு மறுப்பு தெரிவித்ததால் எங்கள் கிரிக்கெட் அழிந்தது - பாகிஸ்தான் மந்திரி பரபரப்பு தகவல்
அமெரிக்கா தனது ராணுவ முகாம்களை இங்கு அமைக்க கேட்டிருந்தது, முடியவே முடியாது என்றோம் அதற்கான விலையை பாகிஸ்தான் கிரிக்கெட் கொடுத்து உள்ளது என பாகிஸ்தான் மந்திரி கூரினார்.
2. ஐ.நா. கவுன்சில் கூட்டம்: காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்தியா பதிலடி கொடுத்தது.
3. ஆப்கானிஸ்தான் உடனான விமான சேவை நாளை தொடக்கம்: பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தானை தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதும் அங்கிருந்து தப்பிச்செல்வதற்காக ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான ஆப்கான் மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
4. ஆப்கானிஸ்தானை தனிமைப்படுத்துவது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்; பாக்.வெளியுறவுத்துறை மந்திரி
ஆப்கானிஸ்தானை தனிமைப்படுத்துவது பிராந்தியத்திற்கும் உலகிற்கும் 'கடுமையான விளைவுகளை' ஏற்படுத்தும் என்று ஷா முகம்மது குரோஷி தெரிவித்தார்.
5. பாகிஸ்தானில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு
பாகிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது