இங்கிலாந்தில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து அதிகபட்ச அளவாக ஒரேநாளில் 28,773 பேருக்கு கொரோனா


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 July 2021 5:29 PM GMT (Updated: 2021-07-06T22:59:21+05:30)

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,773 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு தற்போது அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் ஊரடங்கு தளர்வுகளை மேலும் ஒரு மாதத்திற்கு இங்கிலாந்து அரசு தள்ளிவைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்திற்கு பின்னர் அதிகபட்ச அளவாக ஒரேநாளில் புதிதாக 28,773 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 49,58,868 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 268 ஆக உயர்ந்துள்ளது. 

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 43 லட்சத்து 41 ஆயிரத்து 354 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 4,89,246 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

Next Story