உலக செய்திகள்

‘பேஸ்புக்'கில் பரவும் கொரோனா குறித்த தவறான தகவல்கள் மக்களை கொல்கிறது: ஜோ பைடன் + "||" + Social media misinformation about Covid-19 is 'killing people', Biden says

‘பேஸ்புக்'கில் பரவும் கொரோனா குறித்த தவறான தகவல்கள் மக்களை கொல்கிறது: ஜோ பைடன்

‘பேஸ்புக்'கில் பரவும் கொரோனா குறித்த தவறான தகவல்கள் மக்களை கொல்கிறது: ஜோ பைடன்
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.‌ எனினும் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு வெகுவாக குறைந்துள்ளது.
ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தியதன் மூலம் வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போடுவதற்கு இன்னும் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் குறித்தும், அதன் தடுப்பூசி குறித்தும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களே இதற்கு காரணம் என குற்றம் சாட்டும் அமெரிக்க அரசு, தவறான தகவல்கள் பரவுவதை தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க சமூக வலைதள நிறுவனங்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜனாதிபதி ஜோ பைடனிடம் தடுப்பூசிகள் மற்றும் தொற்று நோய் குறித்து பொய்யை பரப்புவதில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் பங்கு குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். 

அதற்கு ஜோ பைடன், “தடுப்பூசிகளை பற்றிய தவறான தகவல்களை எதிர்த்து‌‌ போராடுவதற்கு பேஸ்புக் மற்றும் பிற சமூக வலைத்தள நிறுவனங்கள் போதுமானதாக செயல்படவில்லை. இதன் மூலம் அவர்கள் (சமுக வலைத்தள நிறுவனங்கள்) மக்களை கொல்கிறார்கள்.‌ தடுப்பூசி போடாதவர்கள் மத்தியிலேயே வைரஸ் தொற்று பரவுகிறது” என பதில் அளித்தார்.

ஆனால் பேஸ்புக் நிறுவனம், பொது சுகாதாரத்தை பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இதுவரை ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் பற்றிய தவறான தகவல்களை பேஸ்புக்கில் இருந்து நீக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தான் நெருக்கடி: ‘ஜோ பைடனின் நடவடிக்கை முட்டாள்தனமானது’ - டிரம்ப்
ஆப்கானிஸ்தான் நெருக்கடி சூழலில், ஜோ பைடனின் நடவடிக்கை முட்டாள்தனமானது என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
2. ஆப்கானிஸ்தான் நாட்டை கட்டமைப்பதற்காக அமெரிக்க படைகள் செல்லவில்லை- ஜோ பைடன் விளக்கம்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவத்தை திரும்பப் பெறும் முடிவில் உறுதியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
3. ஆப்கானிஸ்தானின் வீழ்ச்சிக்கு பொறுப்பேற்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதவி விலக வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய பின்னர் வேகமாக முன்னேறி வந்த தலீபான்கள் நேற்று முன்தினம் தலைநகர் காபூலை கைப்பற்றியதன் மூலம் முழு ஆப்கானிஸ்தானையும் தங்கள் வசம் ஆக்கினார்.
4. அமெரிக்காவில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை விரைவில் 16 கோடியை எட்டும் - அதிபர் ஜோ பைடன்
அமெரிக்காவில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் 16 கோடியை எட்டும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
5. அமெரிக்க ஜனாதிபதியான பின் முதல் வெளிநாட்டு பயணம்; ஜோ பைடன், ரஷியாவுக்கு கடும் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதியான பின்னர் முதன்முதலாக ஜோ பைடன் இங்கிலாந்து சென்றார். ரஷியா தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டால் வலுவான பதிலடி கொடுப்போம் என்று அவர் கடுமையாக எச்சரித்தார்.