ஆஸ்திரேலியாவில் ஊரடங்கு தளர்வு கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்; தலைவர்கள் கண்டனம்


ஆஸ்திரேலியாவில் ஊரடங்கு தளர்வு கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்; தலைவர்கள் கண்டனம்
x
தினத்தந்தி 25 July 2021 8:16 PM GMT (Updated: 25 July 2021 8:16 PM GMT)

ஆஸ்திரேலியாவில் ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்க கோரி ஆயிரக்கணக்கானோர் நடத்திய போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

பிரிஸ்பேன்,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு ஆஸ்திரேலியாவில் 6.56 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 10,700க்கும் கூடுதலானோர் பலியாகியுள்ளனா்.

ஆஸ்திரேலியாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தி அந்த நாட்டின் மெல்போர்ன், பிரிஸ்பேன் உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாட்டில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவா்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டது விமா்சனங்களை எழுப்பியுள்ளது.

இதேபோன்று சிட்னியில் நடந்த போராட்டம் தொடா்பாக, 57 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.  கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 500க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனா்.

இந்த போராட்டங்களால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர கூடிய அச்சம் எழுந்துள்ளது.  இதுபற்றி நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிளாடிஸ் பெரிஜிக்ளியான், போராட்டக்காரர்கள் வெட்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

அந்நாட்டில் நேற்று (ஞாயிற்று கிழமை) மாகாணத்தில் 141 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.  இது நாள்தோறும் பதிவாகும் பாதிப்பு எண்ணிக்கையில் 2வது உயர்ந்த பட்ச அளவாகும்.


Next Story