உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் 1,520 தலீபான்கள் கொலை + "||" + 1,520 Taliban have been killed in Afghanistan in the past week

ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் 1,520 தலீபான்கள் கொலை

ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் 1,520 தலீபான்கள் கொலை
ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் 1,520 தலீபான்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.காபூல்,

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டு வருகின்றன.  இதனை பயன்படுத்தி தலீபான் பயங்கரவாதிகள் பல்வேறு மாவட்டங்களை கைப்பற்றி தங்களது கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் 20 மாகாணங்களில் 154 ராணுவ அதிரடி தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன.  தரை, வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதில் 1,520 தலீபான்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.  800க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.  எனினும், இதற்கு பதிலளித்த தலீபான் இயக்கம், இந்த எண்ணிக்கை அதிகம் என கூறியுள்ளதுடன், ஒரு சார்புடையது என தெரிவித்து உள்ளது.