சவுதி அரேபியாவில் ஆகஸ்ட் 1 முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி


சவுதி அரேபியாவில் ஆகஸ்ட் 1 முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
x
தினத்தந்தி 30 July 2021 11:38 AM GMT (Updated: 30 July 2021 11:38 AM GMT)

சவுதி அரேபியாவில் ஆகஸ்ட் 1 முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியாத்,

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நாடுகளில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சவுதி அரேபியாவில் பல மாதங்களுக்குப் பிறகு, சுற்றுலா பயணிகளுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 17 மாதங்களுக்கும் மேலாக சவுதி அரேபியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் மீண்டும் சுற்றுலாவை தீவிரப்படுத்த அந்நாட்டு அரசு முடிவெடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 49 ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலாப் பயணிகள், சவுதி அரேபியாவிற்கு வர அனுமதி வழங்கப்படும் என்றும் அவ்வாறு வரும் போது தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ் மற்றும் 72 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story