மத்திய கிழக்கு நாடுகளில் 4-வது அலை அச்சுறுத்தல்- உலக சுகாதார அமைப்பு


மத்திய கிழக்கு நாடுகளில் 4-வது அலை அச்சுறுத்தல்- உலக சுகாதார அமைப்பு
x
தினத்தந்தி 30 July 2021 11:48 AM GMT (Updated: 30 July 2021 11:48 AM GMT)

டெல்டா வகை கொரோனா பரவல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் 4-வது அலை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனீவா,

டெல்டா வகை கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் கணிசமாக அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. 

இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வகை ( பி.1.617.2) வகை கொரோனா தற்போதுதான் கட்டுக்குள் வந்துள்ளது. எனினும், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் டெல்டா வகை கொரோனா ஆதிக்கம் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. 

டெல்டா வகை கொரோனா பரவல் அதிகரிப்பால் மத்திய கிழக்கு நாடுகளில் 4-அலை அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், “டெல்டா கொரோனா வகை 22 மத்திய கிழக்கு நாடுகளில் 15 நாடுகளில் பரவியுள்ளது.  இந்த வகை வைரஸால், பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களாக தான் இருக்கின்றனர். எனவே இப்பகுதியில் நான்காவது கொரோனா அலை பரவி வருகிறது” என்று தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. 


Next Story