ஆப்கானிஸ்தானில் ஐ.நா. வளாகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்; பாதுகாவலர் உயிரிழப்பு


ஆப்கானிஸ்தானில் ஐ.நா. வளாகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்; பாதுகாவலர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 31 July 2021 2:28 AM GMT (Updated: 2021-07-31T07:58:12+05:30)

ஆப்கானிஸ்தானில் ஐ.நா. வளாகம் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டார்.காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களை ராணுவ வீரர்களை பயன்படுத்தி அரசு ஒடுக்கி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமெரிக்க படைகள், அதிபர் பைடனின் உத்தரவுப்படி வாபஸ் பெறப்பட்டு வருகின்றன.  இதனை பயன்படுத்தி தலீபான் பயங்கரவாதிகள் பல்வேறு மாவட்டங்களை கைப்பற்றி தங்களது கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐ.நா. தூதரகம் வெளியிட்டு உள்ள செய்தியொன்றில், ஹெராத் நகரில் அமைந்துள்ள ஐ.நா. வளாகத்தின் முக்கிய பகுதி மீது அரசுக்கு எதிரான மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், ஆப்கானிஸ்தானிய நாட்டு பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார்.  பிற அதிகாரிகளும் காயமடைந்து உள்ளனர்.  எனினும் இந்த தாக்குதலில் ஐ.நா. அதிகாரிகள் யாரும் காயம் அடையவில்லை என்று தெரிவித்து உள்ளது.

இந்த அறிக்கையில், தலிபான்களை நேரடியாக குறிப்பிடாமல், அரசுக்கு எதிரான சமூக விரோதிகள் சிலர் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர் என்று ஐ.நா. தூதரகம் தெரிவித்து உள்ளது.


Next Story