உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு; பிரேசிலில் ஒரே நாளில் 910 பேர் உயிரிழப்பு + "||" + Corona damage; 910 deaths in a single day in Brazil

கொரோனா பாதிப்பு; பிரேசிலில் ஒரே நாளில் 910 பேர் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு; பிரேசிலில் ஒரே நாளில் 910 பேர் உயிரிழப்பு
பிரேசிலில் கொரோனா பாதிப்புகளால் ஒரே நாளில் 910 பேர் உயிரிழந்து உள்ளனர்.பிரேசிலியா,

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் அதிபர் பொல்சனாரோ ஆட்சி செய்து வருகிறார்.  அந்நாட்டில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  இதேபோன்று உயிரிழப்புகளும் அதிகரித்து காணப்படுகின்றன.

உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து அதிக உயிரிழப்புகளுடன் 2வது இடத்திலும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு அடுத்து 3வது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில், புதிய கொரோனா அலை பாதிப்புகளால் அந்நாடு மீண்டும் பாதிப்படைந்து உள்ளது.  இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகளவில் அனுமதிக்கப்படுகின்றனர்.

பிரேசிலில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 910 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால், மொத்த உயிரிழப்பு 5,56,370 ஆக உயர்வடைந்து உள்ளது.  37,582 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு மொத்த எண்ணிக்கை 1 கோடியே 99 லட்சத்து 17 ஆயிரத்து 855 ஆக உயர்வடைந்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவிகள் 5 பேருக்கு கொரோனா
மதுரை அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த 5 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. இந்தியாவில் 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. அமெரிக்காவில் 57,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
அமெரிக்காவில் 57,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. கொரோனா பாதிப்பு; இலங்கையில் பலி எண்ணிக்கை 12 ஆயிரம் ஆக உயர்வு
இலங்கையில் கொரோனா பாதிப்புகளுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 12 ஆயிரம் கடந்துள்ளது.
5. இந்தியாவில் 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.