உலக செய்திகள்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல் நிலை குறித்து நீடிக்கும் மர்மம் + "||" + Kim Jong Un's Bandage And Spots On Head Add To Health Mysteries

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல் நிலை குறித்து நீடிக்கும் மர்மம்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல் நிலை குறித்து நீடிக்கும் மர்மம்
தலையின் பின் பகுதியில் பேண்டேஜ் உடன் வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படம் வெளியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சியோல்,

உலகின் மர்ம தேசமாக அறியப்படும்  நாடு வடகொரியா. அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் பற்றியும் எந்த தகவலும் வெளி உலகுக்கு உறுதியாக தெரிவது இல்லை. இதனால், அவரது உடல் நிலை குறித்து  அடிக்கடி யூகங்கள் பரவும்.   

இந்நிலையில்,  இன்று கிம் ஜாங்  உன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் ஜூலை மாத இறுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு இருந்த  கிம் ஜாங்-உன் தலையின் பின்புறம் பேண்ட்-எய்ட் ஒட்டப்பட்டிருந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அவருக்கு உடல் ரீதியாக பிரச்சினைகள் இல்லை. நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், சில நாட்களுக்குப் பின் பேண்ட்-எய்ட் நீக்கப்பட்டது என வடகொரிய உளவுத்துறை தெரிவித்ததாக கொரிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவுடன் மோதலுக்கும் தயாராக வேண்டும்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்
ஜோபைடன் நிர்வாகத்துடன் முழு அளவிலான மோதலுக்கு தயாராக வேண்டும் என தனது அரசுக்கு கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2. உடல் மெலிந்த நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்..!
புகைபிடிக்கும் பழக்கம் கொண்ட கிம் ஜாங் உன், உடல் நிலை பற்றி கடந்த சில ஆண்டுகளாகவே செய்திகள் உலா வருகின்றன.