ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக தலீபான்கள் ஆலோசனை


ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக தலீபான்கள் ஆலோசனை
x
தினத்தந்தி 1 Sep 2021 6:30 PM GMT (Updated: 1 Sep 2021 6:30 PM GMT)

ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக தலீபான் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறியுள்ளன. இதையடுத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தின் கீழ் முழுமையாக வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து தலீபான்கள் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள். ஏற்கனவே இது சம்பந்தமாக முடிவு எடுப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் நாட்டில் உள்ள பல்வேறு தலீபான் தலைவர்களையும் சந்தித்து பேசி வந்தனர்.

இதைதொடர்ந்து ஆப்கான் தலைநகர் கந்தகாரில் தலீபான் தலைவர்கள் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தினர். ஈரான் நாட்டில் உள்ள ஆட்சி முறை போல ஆப்கானிஸ்தானிலும் ஆட்சி முறையை கொண்டு வர தலீபான்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலிபான் இயக்கத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் பதவி வழங்கும் வகையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Next Story