ஆப்கானிஸ்தானை தனிமைப்படுத்துவது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்; பாக்.வெளியுறவுத்துறை மந்திரி


ஆப்கானிஸ்தானை தனிமைப்படுத்துவது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்; பாக்.வெளியுறவுத்துறை மந்திரி
x
தினத்தந்தி 10 Sep 2021 4:30 PM GMT (Updated: 10 Sep 2021 4:30 PM GMT)

ஆப்கானிஸ்தானை தனிமைப்படுத்துவது பிராந்தியத்திற்கும் உலகிற்கும் 'கடுமையான விளைவுகளை' ஏற்படுத்தும் என்று ஷா முகம்மது குரோஷி தெரிவித்தார்.

இஸ்லமாபாத், 

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நடந்து வந்த போர், கடந்த மாதம் 15-ந் தேதி முடிவுக்கு வந்தது. அங்கு எப்போதும் துப்பாக்கியும், கையுமாக அலைகிற தலீபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர். அங்கு இடைக்கால அரசையும் தலீபான்கள் அமைத்துள்ளனர்.

இந்த நிலையில், தலீபான்களை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர்களை தனிமைப்படுத்துவது பிராந்தியத்திற்கும் உலகத்துக்கும் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரோஷி தெரிவித்துள்ளார். 

 பாகிஸ்தானில் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள ஸ்பானிஷ் வெளியுறவுத்துறை மந்திரியுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த ஷா முகம்மது குரோஷி இந்தத் தகவலை தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஆலோசிப்பதற்காக ஸ்பானிஷ் வெளியுறவுத்துறை மந்திரி ஜோஸ் மானுவேல் பாகிஸ்தானில் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ளார். 

Next Story