ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபரின் சகோதரர் கொலை- தலீபான்கள் அட்டூழியம்


அம்ருல்லா சலே
x
அம்ருல்லா சலே
தினத்தந்தி 11 Sep 2021 2:09 AM GMT (Updated: 11 Sep 2021 2:09 AM GMT)

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

காபூல், 

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி இருக்கும் நிலையில், அங்கு விரைவில் புதிய அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 

இது ஒருபுறம் இருக்க தலீபான்களின் அரசை ஏற்காத முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே, தன்னைத்தானே ஆப்கானிஸ்தானின் அதிபர் என பிரகடனப்படுத்தி உள்ளார்.

அவரது சொந்த மாகாணமான பஞ்ச்ஷீரில் தலீபான்களுக்கும், எதிர்ப்பு படைகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் அம்ருல்லா சலேயின் மூத்த சகோதரரான ரோகுல்லா சலேயை தலீபான்கள் சிறைப்பிடித்துள்ளனர். 

பின்னர் அவரை சித்ரவதை செய்து ெகாலை செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்து உள்ளன. அதேநேரம் சில நாட்களுக்கு முன்னரே பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தலீபான்களுக்கு எதிராக நடந்த சண்டையில் ரோகுல்லா கொல்லப்பட்டதாக அந்த மாகாணவாசி ஒருவர் தெரிவித்து உள்ளார்.


Next Story