உலக செய்திகள்

ஹமாஸ் ஆயுதக்கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் + "||" + Israel hits Hamas targets in Gaza as hostilities escalate

ஹமாஸ் ஆயுதக்கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்

ஹமாஸ் ஆயுதக்கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்
காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்பின் ஆயுதக்கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது.
ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஹமாஸ் அமைப்பினரின் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. 

இதற்கிடையில், காசா முனையில் இருந்து இஸ்ரேலின் டிரொட் நகர் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இந்த ராக்கெட் தாக்குதல் இஸ்ரேலில் நிறுவப்பட்டுள்ள ஏவுகணை தடுப்பு அமைப்பால் நடுவானில் வெற்றிகரமாக அழிக்கப்பட்டது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினரின் ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் ஆயுதக்கிடங்கு, ஹமாஸ் பயிற்சி கட்டிடங்கள் மற்றும் பதுங்கு குழிகளை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையினர் நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இதற்கிடையில், இஸ்ரேலின் மிகவும் பாதுகாப்பு வாய்ந்த சிறைகளில் ஒன்றான கில்போவா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்கள் 6 பேர் சிறை அறையில் உள்ள கழிவறை வழியாக சுரங்கம் தோண்டி தப்பிச்சென்றனர். 

கடந்த 6-ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தப்பிச்சென்ற 6 பாலஸ்தீனர்களில் 4 பேரை பிடித்தனர். எஞ்சிய இருவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பக்ரைன் நாட்டில் இஸ்ரேல் தூதரகம் திறப்பு
பக்ரைன் தலைநகர் மனாமாவில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு விமானம் சென்றது.
2. இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய பாலஸ்தீன கைதிகளில் கடைசி 2 பேரும் கைது
இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய 6 பாலஸ்தீன கைதிகளில் பிடிபடாமல் இருந்து மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய 6 பாலஸ்தீன கைதிகளில் 4 பேர் பிடிபட்டனர்...
சிறையில் இருந்து தப்பிய 6 பாலஸ்தீன கைதிகளில் 4 பேரை மீண்டும் பிடித்துவிட்டதாக இஸ்ரேல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
4. இஸ்ரேலிய பாதுகாப்பு படை - பாலஸ்தீன போராட்டக்காரர்கள் இடையே மோதல்
இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீன போராட்டக்காரர்களுக்கும் இடையே நேற்று மோதல் வெடித்தது.
5. சிறையில் இருந்து தப்பிய பாலஸ்தீன கைதிகளின் உறவினர்களிடம் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் விசாரணை
சிறையில் இருந்து தப்பிச்சென்ற பாலஸ்தீன கைதிகளின் உறவினர்களிடம் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர்.