கொரோனா பாதிப்பு குறைந்ததால் அனைத்து எல்லைகளையும் திறந்த நேபாளம்!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Sep 2021 10:26 PM GMT (Updated: 22 Sep 2021 10:26 PM GMT)

நேபாள நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் அனைத்து எல்லைகளையும் அந்நாடு திறந்துள்ளது.

காத்மாண்டு, 

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கொரோனா 2-வது அலையின் தீவிரத்தால் அனைத்து எல்லை நுழைவுவழிகளையும் கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதி அந்நாட்டு அரசு மூடியது. 

தற்போது அந்நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால், அனைத்து நுழைவுவழிகளையும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட, கொரோனா தொற்று சோதனையில் ‘நெகட்டிவ்’ சான்றிதழ் பெற்ற வெளிநாட்டவர்கள் அனைவரும் நேபாளத்துக்கு வரலாம் என்று அந்நாட்டு சுகாதாரம் மற்றும் மக்கள்தொகை மந்திரி உமேஷ் ஷிரேஸ்தா கூறினார். 

கொரோனாவால் தேக்கம் அடைந்துள்ள சுற்றுலாத் துறைக்கு ஊக்கம் அளிக்கும்வகையில் இந்த முடிவை நேபாள அரசு எடுத்துள்ளது. நேபாளத்துக்கு இந்தியாவுடன் 35 எல்லை நுழைவுவழிகளும், சீனாவுடன் 2 நுழைவுவழிகளும் உள்ளன.

Next Story