உலக செய்திகள்

அமெரிக்காவில் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 18 கோடியைத் தாண்டியது + "||" + More than 18 crore people vaccinated with 2 doses of the vaccines in US

அமெரிக்காவில் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 18 கோடியைத் தாண்டியது

அமெரிக்காவில் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 18 கோடியைத் தாண்டியது
அமெரிக்காவில் இதுவரை 18 கோடிக்கும் அதிகமானோர் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் மாடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 39,01,14,328 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதில் 21,34,56,787 பேர் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 18,36,70,870 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தவிர குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக கண்டறியப்பட்டவர்களில் சுமார் 20 லட்சம் பேர் 3-வது டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அட்லாண்டிக் கடலில் தத்தளித்த செல்லப்பிராணி நாய்க்குட்டியை கடலில் குதித்து மீட்ட நபர்...!
அட்லாண்டிக் கடலில் தத்தளித்த செல்லப்பிராணி நாய்க்குட்டியை படகில் சென்ற நபர் கடலில் குதித்து பத்திரமாக மீட்டுள்ளார்.
2. கொரோனா தடுப்பூசி விவகாரம்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகம்
கொரோனா தடுப்பூசி விவகாரம்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகம்.
3. “புதுச்சேரியில் விரைவில் 100% தடுப்பூசி செலுத்தப்படும்” - தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை
புதுச்சேரி விரைவில் 100% பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலமாக மாறும் என துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
4. அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொரோனாவுக்கு பலி
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொலின் பவுல் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தார்.
5. அசைவ, மதுபிரியர்கள் வசதிக்காக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமைக்கு மாற்றம்
அசைவ, மதுபிரியர்கள் வசதிக்காக மெகா தடுப்பூசி முகாம் இனி சனிக்கிழமை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.