பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்க பேரழிவு; ஐ.நா. பொது செயலாளர் இரங்கல்


பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்க பேரழிவு; ஐ.நா. பொது செயலாளர் இரங்கல்
x
தினத்தந்தி 8 Oct 2021 8:35 AM GMT (Updated: 8 Oct 2021 8:35 AM GMT)

பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்க பேரழிவுக்கு ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரெஸ் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

நியூயார்க்,

பாகிஸ்தான் நாட்டின் ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் பலூசிஸ்தான் மாகாணத்தில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்தது.  இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 20 பேர் உயிரிழந்து உள்ளனர்.  300 பேர் காயமடைந்து உள்ளனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரெஸ் இரங்கல் தெரிவித்து உள்ளார்.  இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கும், சேதம் ஏற்பட்டதற்கும் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.  இதில் பாதிக்கப்பட்டவர்களுடன் எனது நினைவுகள் உள்ளன என தெரிவித்து உள்ளார்.


Next Story