உலக செய்திகள்

சீனாவில் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு; 47 பேர் காயம் + "||" + China fire: death toll rises to 4; 47 people were injured

சீனாவில் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு; 47 பேர் காயம்

சீனாவில் வெடிவிபத்து:  பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு; 47 பேர் காயம்
சீனாவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது.


ஷென்யாங்,

சீனாவில் லையாவோனிங் மாகாணத்தில் ஷென்யாங்க் நகரில் உணவு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.  இதில், இன்று வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது.  47 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்குரிய வகையில் உள்ளது.

இதுபற்றி வெளியான வீடியோவில், அந்த தெரு முழுவதும் கட்டிட இடிபாடுகள் பரவி கிடந்தன.  இந்த வெடிவிபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதில் பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகளை தங்க வைப்பதற்காக 36 ஓட்டல்களை அரசு அதிகாரிகள் தயார் செய்து வைத்து உள்ளனர்.  நடப்பு ஆண்டு ஜூனில் ஏற்பட்ட வாயு வெடிவிபத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர்.  138 பேர் காயமடைந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. துப்பாக்கி குண்டு பாய்ந்து தொழில் அதிபர் படுகாயம் தற்கொலை முயற்சியா? போலீசார் விசாரணை
துப்பாக்கி குண்டு பாய்ந்து சென்னையில் தொழில் அதிபர் பலத்த காயம் அடைந்தார். அவர் தற்கொலை முயற்சி செய்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. பயங்கரவாத தாக்குதல் விசாரணை: பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் இம்ரான்கான் ஆஜர்
பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்காக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ஆஜரானார்.
3. ராஜேந்திர பாலாஜி மனு மீதான விசாரணை தள்ளி வைப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி மனு மீதான விசாரணை தள்ளி வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது
4. ஜெயலலிதாவின் கார் டிரைவர் விபத்து வழக்கு: சகோதரர், உறவினரிடம் டி.ஐ.ஜி. நேரில் விசாரணை
ஜெயலலிதாவின் கார் டிரைவர் விபத்து வழக்கு தொடர்பாக சகோதரர், உறவினரிடம் டி.ஐ.ஜி. மகேஸ்வரி நேரில் விசாரணை நடத்தினார்.
5. சீனாவில் வெடிவிபத்தில் ஒருவர் பலி; 33 பேர் காயம்
சீனாவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியானார். 33 பேர் காயமடைந்து உள்ளனர்.