உலக செய்திகள்

“ஒரே நாடு ஒரே சட்டம்” சட்ட வரைவு தயாரிக்க குழு அமைத்தது இலங்கை அரசு + "||" + Lankan prez appoints task force led by controversial monk for ‘One Country One Law'

“ஒரே நாடு ஒரே சட்டம்” சட்ட வரைவு தயாரிக்க குழு அமைத்தது இலங்கை அரசு

“ஒரே நாடு ஒரே சட்டம்” சட்ட வரைவு தயாரிக்க குழு அமைத்தது இலங்கை அரசு
ஒரே நாடு ஒரே சட்டம் குறித்த வரைவு அறிக்கை தயாரிக்கும் குழுவில் தமிழர்கள் யாரும் இடம் பெறவில்லை.
கொழும்பு,

இலங்கையில் தற்போது அதிபராக இருக்கும் கோத்தபய ராஜபக்சே தனது தேர்தல் பிரசாரத்தின் போது  நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் கொண்டு வரப்படும் என்று சூளுரைத்தார். 2019- ஆம் ஆண்டு அதிபராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஒரே நாடு ஒரே சட்டம்  அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கோத்தபய ராஜபக்சே முனைப்பு காட்டி வருகிறார். 

அந்த வகையில்,  சட்டத்திறகான வரைவு  தயாரிக்க 13- பேர் கொண்ட குழுவை இலங்கை அரசு அமைத்துள்ளது. இந்தக்குழுவின் தலைவராக  புத்த மதத் துறவி ஞானசேரா சாரர் நியமிக்கப்பட்டுள்ளார். 

முஸ்லீம்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு கொண்டவராக அறியப்படும் ஞானசேரா சாரர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

13 பேர் கொண்ட குழுவில் முஸ்லீம்கள் 4 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவில் தமிழர்கள் யாரும் இடம் பெறவில்லை. 2022- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு முன்பாக  ஒரே நாடு ஒரே சட்டம் குறித்த வரைவு அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என வரைவு குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. டி20 உலகக்கோப்பை; பட்லர் அதிரடி சதம், இங்கிலாந்து 163 ரன்கள் குவிப்பு!
டி20 உலகக்கோப்பை போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 164 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
2. டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
3. டி20 உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது.
4. டி-20 உலகக்கோப்பை: இலங்கைக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்
இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 171 ரன்கள் குவித்துள்ளது.
5. டி-20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று கடைசி ஆட்டம்: இலங்கை அணி பந்துவீச்சு
நெதர்லாந்துக்கு எதிரான கடைசி தகுதிச்சுற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.