உலக செய்திகள்

அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி + "||" + Shooting at a party in the United States; 2 killed

அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி

அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி
அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சேக்ரமெண்டோ நகரில் நள்ளிரவில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்து வந்தது.  இதில், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், அதிகாலை 1 மணியளவில், விருந்து நிகழ்ச்சியில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.  இந்த சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  5 பேர் காயமடைந்து உள்ளனர்.  

இதுபற்றி தகவல் அறிந்து சென்ற அதிகாரிகள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.  இதுபற்றி சேக்ரமெண்டோ கவுண்டியின் ஷெரீப் உறுதிப்படுத்தி உள்ளார்.  துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் பற்றி உடனடி தகவல் வெளிவரவில்லை.  சந்தேகத்திற்குரிய வகையிலான விவரமும் தெரியவரவில்லை.  இந்த சம்பவம் பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 3 மாணவர்கள் பலி
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
2. காஷ்மீரில் தொடரும் துப்பாக்கி சூடு; இன்றும் 2 பேர் படுகொலை
காஷ்மீரில் இன்று நடந்த துப்பாக்கி சூட்டில் 2 தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
3. அமெரிக்காவில் கால்பந்து போட்டியில் துப்பாக்கி சூடு; 4 பேர் காயம்
அமெரிக்காவில் கால்பந்து போட்டியின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் காயமடைந்து உள்ளனர்.
4. நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு ஒருவர் படுகாயம்
கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.