உலக செய்திகள்

25 கற்பழிப்பு வழக்குகள்: குற்றவாளி சிறையில் கொரோனாவுக்கு பலி + "||" + Serial rapist dies aged 70 after catching Covid in jail

25 கற்பழிப்பு வழக்குகள்: குற்றவாளி சிறையில் கொரோனாவுக்கு பலி

25 கற்பழிப்பு வழக்குகள்: குற்றவாளி சிறையில் கொரோனாவுக்கு பலி
சிறையில் அடைக்கப்பட்டிருந்த 70 வயதான தொடர் கற்பழிப்பு குற்றவாளி கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தார்.
லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் ஹிண்ட்லி நகரை சேர்ந்தவர் டென்னிஸ் ஸ்மலி. 70 வயதான இவர் 1970-ம் ஆண்டு முதல் சுமார் 45 ஆண்டுகள் தொடர் கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்.

இவர் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், தொடர்ந்து பல பெண்களையும் பாலியல் ரீதியில் துன்புறுத்தல் செய்துள்ளார்.

இதற்கிடையில், டென்னிஸ் ஸ்மலி கடந்த 2016-ம் ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது 25 கற்பழிப்பு வழக்குகள் உள்பட மொத்தம் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து டென்னிஸ் ஸ்மலி மீதான வழக்குகள் லிவர்புல் நகரின் வாக்பில்ட் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தன. விசாரணையில் முடிவில் டென்னிஸ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. இதனால், அவருக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனையை தொடர்ந்து டென்னிஸ் வாக்பில்ட் நகரில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அவர் 2016 முதல் தற்போதுவரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த டென்னிசுக்கு கடந்த பிப்ரவரி 25-ம் தேதி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட போது டென்னிசுக்கு கடந்த மார்ச் 2-ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

கொரோனா உறுதியானதையடுத்து டென்னிஸ் மார்ச் 11-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், 70 வயதான தொடர் கற்பழிப்பு குற்றவாளி டென்னிஸ் கொரோனா தாக்குதலுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட டென்னிஸ் மார்ச் 16-ம் தேதி உயிரிழந்ததாக சிறைத்துறை நிர்வாகம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் புதிதாக 84,429 பேருக்கு கொரோனா பாதிப்பு...!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 84,429 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இங்கிலாந்தில் 16-17 வயது சிறுவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது
இங்கிலாந்தில் 16 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது.
3. ஆஷஸ் டெஸ்ட் : 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது
4. ஆஷஸ் டெஸ்ட் : ஆஸ்திரேலியா அபார பந்து வீச்சு : 188 ரன்களுக்கு ஆல் -அவுட் ஆனது இங்கிலாந்து ..!
5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஹாபெர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது
5. இங்கிலாந்தில் புதிதாக 1,20,821 பேருக்கு கொரோனா பாதிப்பு...!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,20,821 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.