உலக செய்திகள்

ரூ.11.25 லட்சத்திற்கு விலை போன ஆடு! சுவாரசியமான சம்பவம் + "||" + Australia’s most expensive goat sells for record $21,000

ரூ.11.25 லட்சத்திற்கு விலை போன ஆடு! சுவாரசியமான சம்பவம்

ரூ.11.25 லட்சத்திற்கு விலை போன ஆடு! சுவாரசியமான சம்பவம்
முன்னதாக 12 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் மதிப்புக்கு ஒரு ஆடு விலை போனதே சாதனையாக இருந்தது.இப்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.
நியூ சவுத் வேல்ஸ்,

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஒரு  சுவாரசியமான சம்பவம் அரங்கேறி உள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை சேர்ந்த ஆண்ட்ரூ மோஸ்லி எனும் நபர் காட்டு ஆடுகளை மேய்த்து விற்று வருவதை தொழிலாக கொண்டவர்.


நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கோபார் நகரத்தில் மரக்கேஷ் என பெயரிடப்பட்டுள்ள ஆட்டுக்கிடாவை 11.25 லட்ச ரூபாய்க்கு (21,000 ஆஸ்திரேலிய டாலர்)  அவர் வாங்கியுள்ளார்.

முன்னதாக 12 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் மதிப்புக்கு ஒரு ஆடு விலை போனதே சாதனையாக இருந்தது. இப்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.

இது குறித்து ஆண்ட்ரூ மோஸ்லி கூறுகையில், “மிக குறைந்த அளவிலேயே காட்டு ஆடுகள் உலகில் உள்ளன. ஆட்டிறைச்சிக்காக அதிக அளவில் காட்டு ஆடுகள் கொல்லப்படுவது இதற்கான காரணமாக இருக்கிறது. அதனால் தான் இவ்வளவு அதிக விலைக்கு இந்த ஆடு விற்பனை ஆகியுள்ளது”  என கூறியுள்ளார். 

விவசாயிகள் பெரும்பாலும் சொந்தமாக ஆடுகளை வளர்த்து அவற்றின் மூலமாக இனப்பெருக்கம் செய்ய வைத்து ஆடுகளின் பெருக்கத்தை அதிகரித்து வருகின்றனர். இந்த முரட்டு ஆட்டுக்கிடா இனப்பெருக்கம் செய்யும் திறன் அதிகம் கொண்டதாக பார்க்கப்படுகிறது. எனவே, தான் இதை அவர் வாங்கியுள்ளதாக கூறியுள்ளார். 

மோஸ்லி தனது மிகப்பெரிய பண்ணையில் இப்போது புதிய வரவாக இந்த ஆட்டை சேர்த்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் : மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியை வீழ்த்தியது கோபர்ட் ஹூரிகேன்ஸ் அணி
மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோபர்ட் ஹூரிகேன்ஸ் அணி வெற்றி பெற்றது.
2. ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் : ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
ஆஷஸ் தொடரின் முதல் இரு டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
3. வெற்றி கொண்டாட்டத்தில் ஷூவில் குளிர்பானம் குடித்த ஆஸ்திரேலிய வீரர்கள்
ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக 20 ஓவர் உலகக்கோப்பையை வென்றது
4. ஐ.சி.சி. போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா
ஐ.சி.சி. நடத்தும் உலக அளவிலான போட்டிகளில் ஆஸ்திரேலியாவே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
5. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டம்; 8 - விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலிய அணி 16.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.