உலக செய்திகள்

பேருந்து பயணம்,கடைகளுக்கு செல்லும் போது மாஸ்க் கட்டாயம்; இங்கிலாந்து அறிவிப்பு + "||" + Face masks compulsory in England shops, transport from Tuesday

பேருந்து பயணம்,கடைகளுக்கு செல்லும் போது மாஸ்க் கட்டாயம்; இங்கிலாந்து அறிவிப்பு

பேருந்து பயணம்,கடைகளுக்கு செல்லும் போது மாஸ்க் கட்டாயம்; இங்கிலாந்து  அறிவிப்பு
இங்கிலாந்தில் பேருந்து பயணம், கடைகளுக்கு செல்லும் போது மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு
லண்டன்,

தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் கொரோனா ஐரோப்பிய நாடுகளில் கால் பதிக்கத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்திலும் இருவருக்கு ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரான் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களையும் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுவதால் உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றன. 

அந்த வையில், இங்கிலாந்தில் கடைகள் மற்றும் பொது போக்குவரத்தை பயன்படுத்துவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை முதல் புதிய உத்தரவு அமலுக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கட்டாயமாக பிசிஆர் பரிசோதனை செய்யப்படும் நடைமுறையை விரைவில் துவங்கும் என சுகதாரத்துறை மந்திரி சாஜித் ஜாவித் தெரிவித்துள்ளார். 

புதிய ஒமிக்ரான் கொரோனா எவ்வாறு செயலாற்றும் என்பதை ஆய்வு செய்ய  மருத்துவ விஞ்ஞானிகளுக்கு கூடுதல் அவகாசம் அளிக்கும் வகையிலேயே புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாகவும் இந்த கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் எனவும் சாஜித் ஜாவித் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விரைவில் வாபஸ் : பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் அடுத்த வாரம் முதல் தளர்த்தப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார் .
2. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியின் கேப்டன் உள்பட 6 பேருக்கு கொரோனா
6 வீரர்கள் பாதிக்கப்பட்டாலும், எஞ்சிய 11 வீரர்களுடன் இந்திய அணி களம் இறங்கியது.
3. பெரம்பலூர் கலெக்டருக்கு கொரோனா
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
4. சீனாவில் புதிதாக 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நேற்று முன்தினம் 127 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
5. தமிழகத்தில் புதிதாக 26,981 பேருக்கு கொரோனா; 1.70 லட்சம் பேருக்கு சிகிச்சை..!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 ஆயிரத்து 981 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.