உலக செய்திகள்

டுவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓ: இந்தியர் பராக் அகர்வால் நியமனம் + "||" + Parag Agrawal becomes Twitter CEO

டுவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓ: இந்தியர் பராக் அகர்வால் நியமனம்

டுவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓ: இந்தியர் பராக் அகர்வால் நியமனம்
டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஜாக் டோர்சி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
வாஷிங்டன்,

உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் டுவிட்டரும் ஒன்று. டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) ஜாக் டோர்சி செயல்பட்டு வந்தார்.

இதற்கிடையில், டுவிட்டர் சிஇஓ பதவியை ஜாக் டோர்சி நேற்று ராஜினாமா செய்தார். இதனையடுத்து, டுவிட்டர் நிறுவனத்தின் அடுத்த சிஇஓ யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்தன.

இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இந்தியாவை பூர்விகமாக கொண்ட பராக் அகர்வால் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர். இவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் டுவிட்டர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். 

டுவிட்டரில் ஆயிரத்திற்கும் குறைவான பணியாளர்கள் இருந்த போது பணியில் சேர்ந்த பராக் கடின உழைப்பால் படிப்படியாக பதவி உயர்வு பெற்று தற்போது அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்துள்ளார். 

கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முக்கிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக பொறுப்பு வகிக்கும் இந்தியர்களான சுந்தர் பிச்சை (கூகுள்) மற்றும் சத்யா நாதெள்ளா ஆகியோரை தொடர்ந்து பராக் அகர்வாலும் முக்கிய நிறுவனமான டுவிட்டரின் தலைமை பொறுப்புக்கு உயர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் டுவிட்டர் பக்கம்...! புகைப்படத்துடன் நடிகை ராதிகா...!
பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமாரின் டுவிட்டர் பக்கம் சில தினங்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டது
2. தென்னிந்திய நடிகர்கள் பற்றி அதிக டுவிட் : முதல் இடத்தில் விஜய்...
தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் பற்றி அதிகம் டுவிட் செய்யப்பட்டுள்ள பட்டியலை டுவிட்டர் வெளியிட்டுள்ளது.
3. டுவிட்டர் நிர்வாகக் குழுவில் அதிரடி மாற்றங்கள்..!
டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பராக் அகர்வால் பொறுப்பேற்ற உடனே நிர்வாகத்தில் அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
4. புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றம் தொடர்பாக புதிய விதிமுறைகள் வெளியீடு - டுவிட்டர் அதிரடி
டுவிட்டரில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்வது தொடர்பாக புதிய விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
5. “வாக்குச் சுத்தம் சொல்லிலும் இல்லை செயலிலும் இல்லை” - கமல்ஹாசன் பதிவு
வாக்குச் சுத்தம் சொல்லிலும் இல்லை செயலிலும் இல்லை என கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.