தடுப்பூசி போடாதவர்களுக்கு ‘ஒமைக்ரான் தொற்றால் அதிக பாதிப்பு’ - தென்ஆப்பிரிக்க டாக்டர்


தடுப்பூசி போடாதவர்களுக்கு ‘ஒமைக்ரான் தொற்றால் அதிக பாதிப்பு’ - தென்ஆப்பிரிக்க டாக்டர்
x
தினத்தந்தி 7 Dec 2021 9:30 PM GMT (Updated: 2021-12-08T03:00:08+05:30)

தடுப்பூசி போடாதவர்களிடம் ஒமைக்ரான் தொற்று அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என தென்ஆப்பிரிக்க மருத்துவக் கழகத் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜோகன்னஸ்பர்க், 

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கொரோனா வைரஸ், உலகை அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்க மருத்துவ கழகத் தலைவரும், ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 70-க்கு மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தவருமான டாக்டர் ஏஞ்சலிக் கூட்ஸ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

‘ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த 2 வாரங்களாக தலைவலி, உடம்பு வலி, தொண்டை வலி போன்ற லேசான தன்மை கொண்ட அறிகுறிகள்தான் தென்படுகின்றன.

இந்த வைரசின் அறிகுறிகள், டெல்டா வைரசின் அறிகுறிகளில் இருந்து வித்தியாசமாக உள்ளன. ஆனால் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இது மாறலாம். ஒமைக்ரான் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. வாசனை, சுவை உணரும் திறன் இழப்பு இதில் இல்லை. இப்போதைக்கு இதற்கான சிகிச்சைக்கு ஆக்சிஜன் தேவைப்படவில்லை. ஆனால் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது என்னவாகும் என்று தெரியவில்லை. 

ஒமைக்ரான் வைரஸ் அதிகமாக தசைகளை பாதிக்கிறது. தடுப்பூசி போடாதவர்களிடம் இது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்களுக்கு கடுமையான களைப்பு போன்ற தீவிரமான அறிகுறிகள் ஏற்படுகின்றன’ என்று அவர் கூறினார்.

Next Story