தென்கொரியாவில் 7 மாத குழந்தைக்கு தவறுதலாக செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி


தென்கொரியாவில் 7 மாத குழந்தைக்கு தவறுதலாக செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 18 Dec 2021 9:41 PM GMT (Updated: 18 Dec 2021 9:41 PM GMT)

தென்கொரியாவில் 7 மாத குழந்தைக்கு தவறுதலாக செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்கொரியாவில் ஏற்கனவே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த செப்டம்பர் மாத மத்தியில் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த இன்னும் அங்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்தநிலையில் தென்கொரியாவில் 7 மாத பச்சிளம் குழந்தைக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சியோங்னம் நகரில் 7 மாத குழந்தை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த குழந்தையின் தாய், குழந்தையை அருகில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு டாக்டர் குழந்தைக்கு வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசியை போடுவதற்கு பதில் கொரோனா தடுப்பூசியை செலுத்தி விட்டார். இதையடுத்து அந்த குழந்தையை பல நாட்கள் ஆஸ்பத்திரியிலேயே வைத்து கவனித்து வந்தனர். எனினும் அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் மாதமே நடந்திருந்தாலும், குழந்தையின் தாய் சம்பந்தப்பட்ட டாக்டரிடம் இழப்பீடு கேட்டு தற்போது வழக்கு தொடர்ந்த பின்னரே இது வெளியுலகத்துக்கு தெரியவந்துள்ளது.


Next Story