மடகாஸ்கர்: கப்பல் கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழப்பு..! 60 பேர் மாயம்

மடகாஸ்கர் கடற்கரை அருகே கப்பல் மூழ்கியதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர், 60 பேரை காணவில்லை.
ஜோகன்னஸ்பர்க்,
மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை அருகே 130 பயணிகளுடன் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தது. கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்தில் தீடிரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கப்பலில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பேரை காணாமல் போயினர்.
கப்பலில் இருந்த 130 பயணிகளில் 45 பேர் மீட்கப்பட்டதாகவும், உள்ளூர் தன்னார்வலர்களின் உதவியுடன் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் துறைமுக அதிகார தலைவர் ஜீன் எட்மண்ட் தெரிவித்தார்.
இது சரக்குகளை கொண்டுசெல்லக்கூடிய கப்பல் என்றும், அதில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்றதாகவும் அவர் கூறினார்.
மற்றொரு துறைமுக அதிகாரியான அட்ரியன் பேப்ரைஸ் கூறுகையில், கப்பலில் எதிர்பாராதவிதமாக தண்ணீர் உள்ளே புகுந்ததன் காரணமாக கவிழ்ந்து இருக்கலாம் என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story