"குறைவான போலீஸ் புகார்கள், அதிக காதல் கடிதங்கள் வர வேண்டும்"- நடிகை கங்கனா ரனாவத் பிரார்த்தனை


குறைவான போலீஸ் புகார்கள், அதிக காதல் கடிதங்கள் வர வேண்டும்- நடிகை கங்கனா ரனாவத் பிரார்த்தனை
x
தினத்தந்தி 1 Jan 2022 10:03 AM GMT (Updated: 2022-01-01T15:34:42+05:30)

குறைவான போலீஸ் புகார்கள், அதிக காதல் கடிதங்கள் வர வேண்டும் ராகு கேது கோவிலில் நடிகை கங்கனா ரனாவத் பிரார்த்தனை செய்துள்ளார்.

திருப்பதி

சர்ச்சைக்கு பெயர் போன நடிகை கங்கனா ரனாவத் தனது புத்தாண்டை  திருப்பதி ராகு-கேது கோவிலுக்கு சென்று தொடங்கியுள்ளார். கடந்த ஆண்டு கங்கனாவுக்கு சிறந்த ஆண்டு  இல்லை என்பது அனைவரும் அறிந்ததே  கங்கனா பல சர்ச்சைகளுக்கு ஆளானார். அதனுடன், அவர் மீது பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. 

தற்போது  தனக்கு ஏற்பட்ட தீங்குகள், மற்றும் தோஷங்களை போக்க, கங்கனா ராகு கேது கோவிலுக்கு சென்றுள்ளார். மேலும் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

திருப்பதி கோவிலிலும் கங்கனா வழிபாடு செய்துள்ளார். புகைப்படங்களில்,  கடவுள் பக்தியில் மூழ்கி தனக்காக பிரார்த்தனை செய்வதை காணலாம். 

கங்கனா கடவுளிடம் செய்த பிரார்த்தனையை, தனது ரசிகர்களிடமும் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவைப் பகிர்ந்துகொண்ட கங்கனா, தனது பதிவில் 'உலகில் ஒரே ஒரு ராகு-கேது கோவில் மட்டுமே உள்ளது.  இது திருப்பதி கோவிலுக்கு  மிக அருகில் உள்ளது. அங்கு நான் வழிபட்டேன். ஐந்து லிங்கங்களில் வாயு லிங்கமும் இங்கு நிறுவப்பட்டுள்ளது. மிகவும் அழகான இடம் இது . 

எனது அன்பான எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பிற்காக நான் இங்கு சென்றுள்ளேன். இந்த ஆண்டு எனக்கு குறைவான போலீஸ் புகார்கள், குறைவான எப்ஐஆர்கள் மற்றும் அதிக காதல் கடிதங்கள் வர வேண்டும். ஜெய் ராகு கேது ஜி' என குறிப்பிட்டு உள்ளார்.Next Story