ஆழம் குறைந்த குளத்தில் ‘டைவ்’ அடித்த நடிகை: கழுத்து உடைந்த பரிதாபம்


ஆழம் குறைந்த குளத்தில் ‘டைவ்’ அடித்த நடிகை: கழுத்து உடைந்த பரிதாபம்
x
தினத்தந்தி 7 Jan 2022 4:12 AM GMT (Updated: 2022-01-07T09:42:16+05:30)

தனக்கு 2022-ஆம் ஆண்டு சிறப்பாக அமையவில்லை என வருத்தம்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய நடிகையான அல்லி சிம்ப்சன், ஆழம் அதிகம் இல்லாத ஒரு குளத்தில் ‘டைவ்’ அடித்தபோது எதிர்பாராதவிதமாக அவரது கழுத்து உடைந்துபோனது.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர் தான் உயிருடன் இருப்பது அதிர்ஷ்டம் என்றும், 4 மாதங்களுக்கு கழுத்தில் பட்டை அணிய வேண்டி இருக்கிறது என்றும் தெரிவித்தார். சிகிச்சையில் இருந்தவாறு அவர் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.

தற்போது குயின்ஸ்லாந்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் அவர், தனக்கு 2022-ஆம் ஆண்டின் தொடக்கம் சிறப்பான முறையில் அமையவில்லை என்றும் அவர் கூறினார்.


Next Story