இங்கிலாந்தில் புதிதாக 1,20,821 பேருக்கு கொரோனா பாதிப்பு...!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 Jan 2022 6:15 PM GMT (Updated: 11 Jan 2022 6:15 PM GMT)

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,20,821 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரேநாளில் புதிதாக 1,20,821 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,47,32,594 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 379 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 609 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 09 லட்சத்து 45 ஆயிரத்து 874 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 36,36,111 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் ஓமைக்ரான் நோய்த்தொற்று விகிதங்கள் அதிகரித்த போதிலும் இறப்பு விகிதத்தை ஒப்பிடுகையில் குறைவானதாகவே உள்ளது. மேலும் கடந்த ஜனவரியில் ஏற்பட்ட இரண்டாவது அலையை விட இப்போது ஐந்து மடங்கு குறைவான இறப்புகள் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story