உலக செய்திகள்

ஐரோப்பா கண்டத்தில் பாதி பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கக்கூடும் - உலக சுகாதார அமைப்பு + "||" + Half of people on the European continent could be infected with the Omicron virus - the World Health Organization

ஐரோப்பா கண்டத்தில் பாதி பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கக்கூடும் - உலக சுகாதார அமைப்பு

ஐரோப்பா கண்டத்தில் பாதி பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கக்கூடும் - உலக சுகாதார அமைப்பு
ஐரோப்பா கண்டத்தில் பாதி பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெனீவா,

ஐரோப்பாவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அடுத்த சில வாரங்களில் அந்த கண்டத்தின் பாதி பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் கூறியதாவது:-

டெல்டா வகை வைரஸ் பரவலை விட ஒமைக்ரான் வேகமாக ஐரோப்பாவில் பரவுகிறது. அடுத்த 6 முதல் 8 வாரங்களுக்குள் ஐரோப்பாவில் மக்கள் தொகையில் பாதி பேர் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டின் முதல் வாரத்தில் ஐரோப்பா முழுவதும் 70 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டதின் அடிப்படையில் இந்த கணிப்பு செய்யப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டின் கடைசி வரை அனைத்து நாடுகளும் டெல்டா வகை வைரசை சமாளித்துக் கொண்டிருந்தன. தற்போது அதைவிட ஒமைக்ரான் பரவும் வேகம் அதிகமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.