பாகிஸ்தானில் மோர்டார் குண்டுகள் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு


பாகிஸ்தானில் மோர்டார் குண்டுகள் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 22 Jan 2022 7:10 PM GMT (Updated: 2022-01-23T00:40:21+05:30)

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள முகாம் ஒன்றில் பழைய மோர்டார் ரக குண்டுகள் திடீரென வெடித்து சிதறியது.

பெஷாவர்,

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில்  உள்ள முகாம் ஒன்றில் பழைய மோர்டார் ரக குண்டுகள் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில், வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கான தங்கும் இடமாக அமைந்து இருந்த அந்த முகாமில் இருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர் குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.

Next Story