திடீரென்று மாயமான ஜப்பானிய ஜெட் விமானம்! தேடுதல் பணி தீவிரம்


image courtesy:reuters
x
image courtesy:reuters
தினத்தந்தி 31 Jan 2022 3:02 PM GMT (Updated: 31 Jan 2022 3:02 PM GMT)

ஜப்பான் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது விமானம் மாயமானது.

டோக்கியோ,

ஜப்பான் நாட்டை சேர்ந்த எப்15 ஜெட் விமானம், அதன் ரேடார் வரையறையை தாண்டி மாயமாகி உள்ளது. இந்நிலையில், விமானத்தை தேடும் பணியில் ஜப்பான் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இன்று மாலை 5.30 மணியளவில், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானப்படையின் போர் விமானம்  காணாமல் போனது.

மத்திய இஷிகாவா பகுதியின் கோமாட்சூ விமானதளத்தில் இருந்து 5 கி.மீ தூரத்திற்கு விமானத்தை காணவில்லை. ஜப்பான் கடல் பகுதியில் விமானம் சென்று கொண்டிருந்த போது அதனுடன் தரையில் இருந்த கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

அந்த விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது குறித்த தகவல் தெரியவில்லை.  

ஜப்பான் அவ்வப்போது இதுபோன்ற விபத்துகளை சந்தித்து வருகிறது. 2019ஆம் ஆண்டு எப்-35ஏ ஸ்டெல்த் ஜெட் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. 

Next Story