ஆப்பிள் நிறுவன புதிய ஐபோன் அறிமுக நிகழ்ச்சி வரும் மார்ச் 8ல் நடத்த திட்டம்


ஆப்பிள் நிறுவன புதிய ஐபோன் அறிமுக நிகழ்ச்சி வரும் மார்ச் 8ல் நடத்த திட்டம்
x
தினத்தந்தி 5 Feb 2022 8:51 PM GMT (Updated: 5 Feb 2022 8:51 PM GMT)

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் அறிமுக நிகழ்ச்சி வருகிற மார்ச் 8ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

வாஷிங்டன்,



ஆப்பிள் நிறுவனம் நடப்பு ஆண்டுக்கான புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தும நிகழ்ச்சியை வருகிற மார்ச் 8ந்தேதி நடத்த திட்டமிட்டு உள்ளது.  இதன்படி, எஸ்.இ. ரக புதிய ஐபோன், 5ஜி இணைப்பு, புதுப்பிக்கப்பட்ட ஐபேட் ஏர் ஆகியவற்றுக்கான அறிவிப்பு வெளியிடப்பட கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் சிலிகானுடன் புதுப்பிக்கப்பட்ட மேக் மினி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட கூடும்.  நடப்பு மார்ச்சின் முதல் பாதியில் ஐ.ஓ.எஸ். 15.4ஐ வெளியிடவும் ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த ஐ.ஓ.எஸ். 15.4 உதவியால், முக கவசம் அணிந்தபோதிலும், பேஸ் ஐ.டி. மூலம் ஐபோனை அன்லாக் (திறந்து பயன்படுத்த) செய்ய முடியும்.  நடப்பு பயன்பாட்டில் உள்ள எஸ்.இ. (2020) போன்றே மேம்படுத்தப்பட்ட எஸ்.இ. ரக ஐபோன் ஆனது, மேம்படுத்தப்பட்ட கேமிராக்கள், ஒரு புதிய சிப்செட் மற்றும் 5ஜி இணைப்பு ஆகியவற்றுடன் புதிய வரவாக வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.

இதேபோன்று ஏ15 பையோனிக் சிப்செட், 5ஜி இணைப்பு மற்றும் 10.9 அங்குல டிஸ்பிளேவுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட ஐபேட் ஒன்றும் தயாராகி வருகிறது.

எம்1 புரோ மற்றும் எம்1 மேக்ஸ் அல்லது எம்2 போன்று ஆப்பிள் சிலிக்கானுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட மேக் மினி ஒன்றும் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.




Next Story