விண்வெளியில் 355 நாட்கள் தங்கியிருந்து சாதனை..!! பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்


Image Courtesy: ANI
x
Image Courtesy: ANI
தினத்தந்தி 30 March 2022 11:39 PM GMT (Updated: 30 March 2022 11:39 PM GMT)

அமெரிக்க விண்வெளி வீரர், ரஷ்ய விண்வெளி கேப்சூலில் இரண்டு ரஷிய விண்வெளி வீரர்களுடன் பூமிக்கு திரும்பினார்.

வாஷிங்டன், 

நாசா விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹெய். இவர் கடந்த 2021, ஏப்ரல் 9-ம் தேதி அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணி மேற்கொள்வதற்காக பூமியில் இருந்து புறப்பட்டார். 

இவர் சமீபத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் (355 நாட்கள்) தங்கியிருந்து பணி செய்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு ஸ்காட் கெல்லி விண்வெளியில் தொடர்ந்து 340 நாட்கள் தங்கியிருந்ததே சாதனையாக இருந்தது. 

இந்நிலையில் சர்வதேச விண்வெளியில் பணி மேற்கொள்வதற்காக 355 நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்த விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹெய், கஜகஸ்தானில் ரஷிய விண்வெளி காப்ஸ்யூலில் இன்று பூமிக்கு திரும்பினார். அவர் பூமிக்கு திரும்புவதை நாசா நேரடி ஒளிபரப்பு செய்தது. மேலும் அவருடன் இரண்டு ரஷிய விண்வெளி வீரர்களும் (அன்டன் ஷ்காப்லெரோவ் மற்றும் பியோட்ர் டுப்ரோவ்) பூமிக்கு திரும்பினர். பூமிக்கு திரும்பிய இவர்கள் மூவரும் மீண்டும் தங்களது வழக்கமான பணியை மேற்கொள்ள உள்ளனர்.



Next Story