‘அதிபர் பதவி விலகினால் ஆட்சியை ஏற்போம்’ - இலங்கை எதிர்க்கட்சி அறிவிப்பு


‘அதிபர் பதவி விலகினால் ஆட்சியை ஏற்போம்’ - இலங்கை எதிர்க்கட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 10 May 2022 6:54 PM GMT (Updated: 2022-05-11T00:24:59+05:30)

அதிபர் பதவி விலகினால் ஆட்சியை ஏற்போம் என்று இலங்கை எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.

கொழும்பு, 

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினால் ஆட்சி அதிகாரத்தை ஏற்போம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (எஸ்.ஜே.பி.) அறிவித்துள்ளது.

இந்த கட்சி எம்.பி. ஹர்ஷன ராஜகருணா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அதிபர் பதவி விலகினால் ஆட்சியை கைப்பற்றுவது என எங்கள் கட்சி தீர்மானித்துள்ளது. பெரும்பாலான எம்.பி.க்கள் தற்போதைய அதிபர் பதவி விலகினால் மட்டுமே நமது கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று முன்மொழிந்தனர்” என குறிப்பிட்டார்.

இந்த கட்சி, முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story