ஆஸ்திரியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி


ஆஸ்திரியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 25 Nov 2023 8:33 PM GMT (Updated: 26 Nov 2023 6:19 AM GMT)

விபத்து குறித்து ஆஸ்திரிய போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஆஸ்திரியா,

மேற்கு ஆஸ்திரியாவில் க்ரூனாவ் இம் அல்ம்டல் பகுதியில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்ததாக ஆஸ்திரிய போலீசார் தெரிவித்தனர். கடும் பனிப்பொழிவான மலைப்பகுதியில் விமானத்தின் பாகங்கள் சிதறிக்கிடப்பதைக் கண்டு தேடுதல் பணி தொடங்கப்பட்டது.

விபத்தில் உயிரிழந்த நான்கு பேரையும் உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. விபத்துக்கான காரணமும் இன்னும் அறியப்படாத நிலையில், விபத்து குறித்தும், உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்தும் ஆஸ்திரிய போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


Next Story