நாஜி படையில் பணியாற்றிய 101 வயது முதியவருக்கு சிறை: ஜெர்மனி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


நாஜி படையில் பணியாற்றிய 101 வயது முதியவருக்கு சிறை: ஜெர்மனி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x

Image Courtacy: AFP

2-ம் உலகப்போரின்போது நாஜி படையில் பணியாற்றிய 101 வயது முதியவருக்கு சிறை தண்டனை விதித்து ஜெர்மனி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

பெர்லின்,

2-ம் உலகப்போரின் போது ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகள் ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு அருகே வதை முகாம் அமைத்து 2 லட்சத்துக்கு அதிகமான கைதிகளை அடைத்து வைத்திருந்தனர்.

அவர்களில் பல்லாயிரக்கணக்கான கைதிகள் பட்டினி, நோய், கட்டாய உழைப்பு மற்றும் பிற காரணங்களால் இறந்தனர். இன்னும் ஆயிரக்கணக்கானோர் துப்பாக்கிச் சூடு, தூக்கில் போடுதல் மற்றும் விசு வாயுவை சுவாசிக்க வைத்தல் போன்ற தண்டனைகள் மூலம் கொல்லப்பட்டனர்.

இந்த சூழலில் நாஜி கால குற்றவாளிகள் மீது விசாரணை நடத்தி வரும் தற்போதைய ஜெர்மனி அரசு, நாஜி வதை முகாமில் காவலராக பணியாற்றிய 101 வயது முதியவருக்கு எதிராக கடந்த ஆண்டு விசாரணையை தொடங்கியது. அந்த முதியவர் 3,518 பேரை கொலை செய்ய உதவியதாக குற்றம்சாட்டப்பட்டு விசாரணையை எதிர்கொண்டு வந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் பெயர் விவரங்கள் வெளியிடப்படாத அந்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜெர்மனி கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.


Next Story