மத சுதந்திர மீறல்; இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் பெண் எம்.பி. தீர்மானம் தாக்கல்


மத சுதந்திர மீறல்; இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் பெண் எம்.பி. தீர்மானம் தாக்கல்
x

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் எம்.பி. இந்தியாவுக்கு எதிரான தீர்மானம் தாக்கல் செய்துள்ளார்.

வாஷிங்டன்,

சோமாலியாவை சேர்ந்தவர் இல்ஹன் அப்துல்ஹி ஒமர். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். இல்ஹன் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் பெண் எம்.பி.யாக உள்ளார்.

இதனிடையே, இல்ஹன் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்றார். அவரது செயலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் இல்ஹன் இந்தியாவுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை கொண்டுவந்துள்ளார். இந்தியா மத சுதந்திரத்தில் தலையீடுவதாகவும், மத சுதந்திரத்தை மீறும் வகையில் இந்தியா செயல்படுவதாகவும் இல்ஹன் தனது தீர்மானத்தில் தெரிவித்துள்ளார்.

மத சுதந்திரத்தை மீறும் வகையில் செயல்படும் இந்தியாவை மத சுதந்திரத்தை மீறும் 'குறிப்பிட்ட கவலைக்குரிய நாடு' என அமெரிக்க அரசு அறிவிக்க வேண்டுமென இல்ஹன் தனது தீர்மானத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை இல்ஹன் சக எம்.பி.க்களான ரஷிதா தலிப், ஜுயன் வர்கன் ஆகியோரின் ஆதரவோடு பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்தக்கொள்ளப்பட வாய்ப்புகள் மிகக்குறைவு என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story