பாலின பாகுபாடு புகார்: ரூ.922 கோடி இழப்பீடு வழங்க கூகுள் ஒப்புதல்!


பாலின பாகுபாடு புகார்: ரூ.922 கோடி இழப்பீடு வழங்க கூகுள் ஒப்புதல்!
x

கூகுளில் பணியாற்றிய 15,500 பெண்களுக்கு ரூ.922 கோடியை இழப்பீடாக வழங்க கூகுள் ஒப்புக்கொண்டுள்ளது.

நியூயார்க்,

பாலின பாகுபாட்டை கடைபிடித்தாகக் கூறி கூகுள் நிறுவனம் 11 கோடியே 8 லட்சம் டாலர்கள் (சுமார் ரூ.922 கோடி) இழப்பீடு செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.

2013ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் செயல்பட்டு வரும் கூகுள் தளத்தில், பணியாற்றிய அனுபவம் வாய்ந்த பெண்களைக் காட்டிலும் அங்கு ஆண்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

ஊதிய வேறுபாடும் கடைபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 2017ம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சமமான பதவி வகிக்கும் ஆண்களை விட பெண்களுக்கு கூகுள் குறைவான ஊதியம் வழங்குவதாக குற்றம் சாட்டப்பட்டது.

தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 2013ம் ஆண்டு முதல் கலிபோர்னியாவில் கூகுளில் பணியாற்றிய 15,500 பெண்களுக்கு ரூ.922 கோடியை இழப்பீடாக வழங்க கூகுள் நேற்று ஒப்புக்கொண்டுள்ளது.

கூகுள் வெளியிட்ட அறிக்கையில், இந்த வழக்கில் நாங்கள் இருதரப்பினரும் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளோம். அதன்படி, இந்த வழக்கில் உள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் கூகுள் மறுக்கிறது. எல்லா நேரங்களிலும் பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுடன் கூகுள் முழுமையாக இணங்கியுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்த ஒப்பந்தத்தை நீதிபதிகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை.

முன்னதாக, 2021ம் ஆண்டு, பெண்கள் மற்றும் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள் மீது பாகுபாடு காட்டியதாக 38 லட்சம் டாலர்கள் அபராத தொகையை அமெரிக்க தொழிலாளர் துறைக்கு செலுத்த ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story