பொருளாதாரத்தை ஊக்குவிக்க ரூ.172 கோடியில் 5 புத்தாக்க மையங்களை அமைக்கும் இஸ்ரேல்


பொருளாதாரத்தை ஊக்குவிக்க ரூ.172 கோடியில் 5 புத்தாக்க மையங்களை அமைக்கும் இஸ்ரேல்
x

கோப்புப்படம்

பொருளாதாரத்தை ஊக்குவிக்க ரூ.172 கோடியில் 5 புத்தாக்க மையங்களை இஸ்ரேல் அமைக்க உள்ளது.

ஜெருசலேம்,

இஸ்ரேல் நாட்டில் விவசாயம், ஆற்றல், காலநிலை மாற்ற சவால்கள் போன்றவற்றில் புதுமையான தொழில்நுட்பங்களை செலுத்த அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது. அதன்படி தொழில்நுட்ப வேலைவாய்ப்பு மற்றும் நிலையான பொருளாதாரத்தை ஊக்குவிக்க ரூ.172 கோடி செலவில் 5 புத்தாக்க மையம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொழில் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பல புதுமையான திட்டங்கள் கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது.

இதற்காக அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்களை கொண்ட உரிமையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் இந்த புத்தாக்க மையத்தை அமைப்பதற்கும், இயக்குவதற்கும் உதவியாக இருப்பார்கள் என இஸ்ரேல் புத்தாக்க மையம் தெரிவித்துள்ளது.


Next Story