குவைத்தில் 2017-க்குப் பின் முதன்முறையாக ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் 7 பேருக்கு மரண தண்டனை


குவைத்தில்  2017-க்குப் பின் முதன்முறையாக ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் 7 பேருக்கு மரண தண்டனை
x

குவைத்தில் 2017-ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக 2 பெண்கள் உள்பட 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

குவைத்,

குவைத்தில் 7 பேருக்கு ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்த நாட்டில் இது போன்ற கூட்டு மரண தண்டனை நிறைவேற்றம் மிகவும் அபூா்வம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அரசுக்குச் சொந்தமான 'குனா' செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி,

பல்வேறு குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் மத்திய சிறைச் சாலையில் நேற்று தூக்கிலிடப்பட்டனா். மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவா்களில் 3 குவைத் நாட்டு ஆண்கள், ஒரு குவைத் நாட்டுப் பெண், ஒரு சிரியா நாட்டவா், ஒரு பாகிஸ்தானியா், ஒரு எத்தியோப்பிய பெண் அடங்குவா் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மனிதா்களின் மிகவும் புனிதமான உரிமையாகிய உயிா்வாழும் உரிமையை அவா்கள் பிறரிடமிருந்து பறித்ததால் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அரசுத் தரப்பு நீதித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கடைசியாக 2017 ஜனவரி 25-ஆம் தேதி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேர் தூக்கிலிடப்பட்டனர். நேற்று குவைத் 7 பேர் தூக்கிலப்பட்டுள்ளனர். இந்த தண்டனைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆம்னெஸ்டி பொது மன்னிப்பு சபை, 'இதுபோன்ற தண்டனைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இவை கொடூரமானவை, மனிதத்தன்மையற்றவை மற்றும் கீழ்த்தரமானவை' என்று விமர்சித்துள்ளது. இந்த மரண தண்டனை நிறைவேற்றத்து ஐரோப்பிய யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது.

குவைத்தில் 1960 தொடங்கி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story