வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை


வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
x

வடகொரியா இன்று பாலிஸ்டிக் ரக ஏவுகணை ஏவி சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

பியாங்யாங்,

உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக நடப்பு ஆண்டில் வடகொரியாவின் அடுத்தடுத்த ஏவுகணை சோதனைகள் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் வடகொரியா இன்று பாலிஸ்டிக் ரக ஏவுகணை ஏவி சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு தான் திட எரிபொருளால் இயங்கும் மோட்டார்களை கொண்ட புதிய ஆயுதத்தை வெற்றிகரமாக நடத்தியதாக வடகொரியா அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் மீண்டும் பாலிஸ்டிக் ரக ஏவுகணையை சோதித்து பார்த்து இருக்கிறது. இந்த ஏவுகணைகள் 500 கி.மீட்டர் தூரம் வரை பறந்து சென்றதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story